சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற ரவுடி அதிரடி கைது !
கைது
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் இவர் போலீசாருடன் கோட்டைமேடு-குயிலாப்பாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த பிரபல ரவுடி மணவாளனை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது ரவுடி மணவாளன், தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றார். இதைப்பார்த்ததும் அவருடன் வந்து இருந்த மற்ற போலீசார், ரவுடி மணவாளனை சுற்றிவளைத்து பிடித்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ரவுடி மணவாளனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து விசாரித்தபோது, குயிலாப்பாளையம் பகுதியில் பொதுமக் களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதற்காக அவர் அங்கு நின்று இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சக்தி வழக்குப்பதிவு செய்து மணவாளனை கைது செய்தார். பின்னர் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறை யில் அவர் அடைக்கப்பட்டார்.