நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை

நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை

நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை திருச்சி மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது

நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை திருச்சி மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது

திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மத்திய விலங்கு காட்சியக ஆணையம் (Central zoo Authority) அனுமதியுடன் தமிழ் நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகிறது. இங்கு, தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி உட்பட 10 பெண் யானைகள் பராமரிக்கப்படுகிறது.

தற்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், பிச்சை எடுக்க வைத்தும் யானைகளை துன்புறுத்துவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் புகார்களின் அடிப்படையில் சோதனை நடந்தது. அதில், 'ஜெயின்னி' என்ற 58 வயது பெண் யானையை மீட்டு திருச்சி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டதின் பெயரில் இன்று முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.

புதிதாக வந்த ஜெயின்னி பெண் யானையை தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் பெயரில், வன கால்நடை மருத்துவ அலுவலர் யானைகளை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைகளுக்கு வழங்கப்பட வேண்டிய திட உணவுகள், பசுந்தீவனம், காய்கறிகள், பழங்கள் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவைகள் குறித்து அறிக்கை வழங்கியதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story