திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

நகர் மன்ற தலைவிக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டதாகும். இந்த நிலையில் கடந்த நவம்பர் 9ம் தேதி திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 22 திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான மனு ஆணையரிடம் வழங்கினர். இந்த நிலையில் இன்று அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஆணையர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று ஒரு திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கூட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை இருப்பினும், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் போதிய உறுப்பினர்கள் வரவில்லை என்ற காரணத்தினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியுற்றது என ஆணையர் சபாநாயகம் தெரிவித்த நிலையில் விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆணையரிடம் வாக்குவாதம் செய்து நிலையில் ஆணையர் வெளியேறி விட்டார்.

மேலும், நகராட்சி ஆணையரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு கையில் இருந்த தண்ணீர் கண்கள் மற்றும் அலைபானிகளை தூக்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்து ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அதிமுக நகர்மன்ற துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜூ செய்தியாளர்களை சந்தித்தபோது ஆட்சி அதிகாரங்களை கொண்டு திமுக அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கையெழுத்திட்ட நகர்மன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்றதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story