வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் !
போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரி திண்டுக்கல்லில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு உட்பட பலவிதமான நிறுத்தப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிர்வாகிகள் நாகராஜன், அர்ஜுனன் உட்பட பட பங்கேற்றனர்.
Next Story