இரவிலும் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான, பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினை சார்பில், பிப்ரவரி 27ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வேப்பந்தட்டை , வேப்பூர், ஆலத்தூர், ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள் .மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து, பணிப் புறக்கணிப்பு செய்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் மார்ச் 4ம் தேதி இன்று காலை 9 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர் மேலும் பேச்சுவார்த்தை அடிப்படையில். தீர்வு இல்லை என்றால், மாநில மையத்தின் முடிவின்படி தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்த நிலையில். இரவு நேரத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இரவு உணவை ஏற்பாடு செய்து போராட்ட இடத்தில் சாப்பிட்டு தங்களது தொடர் போராட்டத்தை தொடர்ந்தனர், மேலும் . பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story