வருவாய் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கத்தினர் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கத்தினர் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்திதாலுக்கா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் வட்டத் தலைவர் தனசேகர் தலைமையில் நடைபெற்றது . வட்ட செயலாளர் முத்து ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத்,வட்ட இணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .வட்ட இணை செயலாளர் செல்வி வரவேற்றார்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் இறந்தவர் குடும்பத்திற்கு வேலை வாய்பு வழங்கும் உத்தரவை ரத்து செய்ததை திரும்ப பெற வலியுறுத்தியும் , மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் செலவினும் ரூபாய் 2500 நிறுத்தியதை திரும்ப பெற வலியுறுத்தியும், புதியதாக வந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற தொடர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என்பது உள்பட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து வருவாய் கிராம ஊழியர்களும் கலந்து கொண்டனர். .

Tags

Next Story