எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்க போராட்டம் நடத்தினர். கோட்டத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும், உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் சிங்கராயன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கோட்டத் தலைவர்கள் முருகேசன், சீனிவாசன், கோட்ட துணைத் தலைவர்கள் செல்வன், மீனாட்சி சுந்தரம், கோட்ட இணைச் செயலாளர்கள் ராஜசேகரன், கலைவாணன் அந்தோணி, கோட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் மற்றும் மாவட்ட தாலுக்கா சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story