பட்டப் பகலில் வீடு புகுந்து ரவுடி அரிவாளால் வெட்டி படுகொலை

பட்டப் பகலில் வீடு புகுந்து ரவுடி அரிவாளால் வெட்டி படுகொலை

கொலை செய்யப்பட்ட நபர்

மண்ணச்சநல்லூர் அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து ரவுடி அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜம்பு லிங்கம் என்பவரின் மகன் பரணிதரன்(வயது 36). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள நந்தா நகரில் குடியேறி உள்ளார்.

தற்டிபோது டிரைவராக பணியாற்றி வரும் இவர் இன்று காலை அவர் மனைவி வேலைக்குச் சென்ற நிலையில் மகள் மற்றும் மகனுடன் அவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து பரணிதரனை சரமாரியாக வெட்டி உள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

பின்னர் அந்த கும்பல், தாங்கள் வந்த காரிலேயே தப்பி சென்று உள்ளது. தகவல் அறிந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வருண்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட பரணிதரன், போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரணிதரனை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தது ஆட்டோ சக்தி என்ற ரவுடியின் தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story