"சிமென்ட் காரை பெயர்ந்து காணப்படும் நேர காப்பாளர் அலுவலக கூரை"

சிமென்ட் காரை பெயர்ந்து காணப்படும் நேர காப்பாளர் அலுவலக கூரை

 சிமென்ட் காரை பெயர்ந்து காணப்படும் மேற்கூரை  

அலுவலகத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி, ஆபத்தான நிலையில் உள்ளது
காஞ்சிபுரம் பேருந்து நிலைய நிழற்கூரையின் ஒரு பகுதியில், காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண்: 76பி, 76சி உள்ளிட்ட அரசு பேருந்துக்கான நேர காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பணிமனை மேலாளர், பேருந்து நிலைய உதவி பொறியாளர், நேர காப்பாளர், பேருந்து நடத்துனர், டிரைவர், பேருந்து வந்து செல்லும் விபரம் அறிய வரும் பயணியர் என, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இங்கு வந்து செல்லும் போக்குவரத்து ஊழியர்களும், நேர காப்பாளரும் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துஉள்ள கூரை பகுதியை சீரமைப்பதோடு, முழு உறுதித்தன்மையை மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story