வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

திருவெறும்பூர் அருகே கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என, வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

திருவெறும்பூர் அருகே கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என, வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என வழக்குரைஞரை அரிவாள் காட்டி மிரட்டிய வழக்கில் காரைக்கால் முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடியை திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தை சேர்ந்த ரஜினி (எ) கருப்பையா என்ற ரவுடியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் பகுதியில் வைத்து கொலை செய்தனர். இதில் பெண் உதவி மின் பொறியாளர் உட்பட 8 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் அதில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கணபதி நகரை சேர்ந்த ஜான்கென்னடி மகன் பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் (30) என்பவனும் ஒருவன் ஆவான்.இந்த நிலையில் அந்த வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ரஞ்சித் குமார் ஆவர் இவர் தற்பொழுது வழக்கறிஞராக உள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித் குமாரை எழில் நகர் அருகே ரஜினி கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கூறி அரிவாள் காட்டி பாட்டில் மணி மிரட்டியுள்ளான். இது சம்பந்தமாக ரஞ்சித் குமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் பாட்டில் மணியை கைது செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் பாட்டில் மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தார் பாட்டில் மணி காரைக்கால் முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில்தொடர்புடைய பெண் தாதா எழில்லரசி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் பாட்டில் மணி மீது 5 கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் உள்ளது. இதில் 19 வழக்குகள் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்

Tags

Next Story