கோயில் பயன்பாட்டுக்கு வந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு

கோயில் பயன்பாட்டுக்கு வந்த  புனிதமான அக்னி தீர்த்த கிணறு

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது .இந்தக் கோயிலில் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாயக்கர்கள் மன்னர் காலத்தில் தலைநகராக இருந்த இந்த கோயில் சிறப்பு பெற்றதாகும். அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது . தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவிற்கும் மற்றும் திருக்கோயில் விஷேசங்களுக்கும், தேவையான தீர்த்தத்தை இந்த தீர்த்த கிணற்றில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.இது சம்மந்தமாக தீர்த்தம் தேவைபடுபவர்கள் திருக்கோயிலுக்கு நேரில் வந்து அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story