வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
நல்லம்பள்ளி செவ்வாய் வார சந்தையில் ரூ,45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று ( ஜூலை 2 ) காலை கூடிய சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 3000 ரூபாய்க்கு துவங்கி 18000 ரூபாய் வரை விற்பனையானது இன்று ஓரே நாளில் 45 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story