முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒரு லட்சம் வழங்கிய பள்ளி நிர்வாகம்!

முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒரு லட்சம் வழங்கிய பள்ளி நிர்வாகம்!

மாணவி யோகலட்சுமிக்கு நிதி வழங்கும் பள்ளி நிர்வாகிகள் 

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாயை உயர்கல்விக்காக வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழகமெங்கும் நேற்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது.வேலூர் மாவட்டத்தில் 593 மதிப்பெண்கள் எடுத்து கே.வி.குப்பம் சேர்ந்த யோகலட்சுமி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார் கே வி குப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் வனிதா ஆகியோரின் இரண்டாவது மகள் யோகலட்சுமி யோகலட்சுமி தந்தை கிராமப்புறங்களில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.யோகலட்சுமி கேவி குப்பம் பகுதியில் உள்ள சாய்குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். இதனிடையே வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள யோகலட்சுமிக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக மேல் படிப்புக்காக ஒரு லட்ச ரூபாய் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.



Tags

Next Story