கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரம்
ரத்தினசாமி
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் ரத்தினசாமி, கந்தவேல், பாஸ்கர்,குமரவேல்,சக்தி உள்ளிட்ட 13 பேர் நேற்று இரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்டிக்கல் தொலைவில் சென்று கொண்டிருக்கும் போது அதிகாலை 1 மணி அளவில் மீனவர் ரத்தினசாமி படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். அப்போது சக மீனவர்கள் தேடியும் மீனவர் கிடைக்காததால் கீச்சாங்குப்பம் மீனவ கிராம தலைவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழும போலீசாருக்கு புகார் கொடுத்தார். மாயமான மீனவர் ரத்தினசாமியை மூன்று விசைப்படைகளில் 25க்கும் மேற்பட்ட மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story