போதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொண்ட மகன்
காரிமங்கலம் அருகே மது போதையில் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகாமையில் உள்ள மேடு அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை இவர் பெங்களூருவில் பலகாரக் கடை வைத்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அப்பாதுரைக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மற்றும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு அப்பாதுரை மது அருந்திவிட்டு குடும்பத்தினரும் தகராறு செய்துள்ளார். தந்தை மற்றும் மகனுக்கு இடையே தகராறு அதிகரித்தது. இதில் ஆத்திரம் உடைந்த மகன் சிங்காரவேல் அருகில் இருந்த இரும்பு பைப்பால் தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது இதன் படுகாயம் அடைந்த அப்பாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சென்று அப்பாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து சிங்காரவேலை கைது செய்தனர்.
Next Story