பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம்

பாபநாசம் அரசினர் பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம்

ஆதார்

கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளி மாணவிகளுக்கு ஆதார சிறப்பு முகாம் நடைபெற்றது.

பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வியாண்டின் முதல் நாளில் மாணவிகளுக்கான சிறப்பு ஆதார் பதிவு முகாமை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பள்ளி தலைமையாசிரியர் நீலாதேவி, திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என். நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜாபர் அலி, துரை முருகன், மமக மாநில மீனவரணி செயலாளர் முஹம்மது அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஃபாயி, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான் திமுக மாவட்ட நிர்வாகிகள் பாவை அனிபா, செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story