9 நிமிடங்களில் நிறைவடைந்த மாநகராட்சி சிறப்பு கூட்டம்!

9 நிமிடங்களில் நிறைவடைந்த மாநகராட்சி சிறப்பு கூட்டம்!

சிறப்பு கூட்டம்

மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த மூன்றாம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார்.உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி சிறப்பு கூட்டம் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் திமுக,அதிமுக,சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்த கவுன்சிலர்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மேயர் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பது பொருளாக வைக்கப்பட்டது.ஒன்றாம் தேதி தேதியிட்ட கடிதத்தில் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி இருப்பதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பணியாற்றிய கல்பனா ஆனந்த

குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தெரிவித்தார். அப்பொழுது அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.அப்பொழுது திமுக,அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ராஜினாமா கடிதத்தை ஏற்பது தொடர்பான கூட்டம் எனவும் விவாதங்கள் கிடையாது எனவும் துணை மேயர் வெற்றி செல்வன் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனிடம் அதிதமுகவின் மேயராக செ.ம.வேலுச்சாமி இருந்த பொழுது ராஜினாமா செய்த பொழுது விவாதம் நடத்தினீர்களா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.மாநகராட்சி கூட்டம் துவங்கிய 9 நிமிடத்திலேயே கூட்டம் நிறைவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் , இன்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினாமா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என பல முறை மன்றத்தில் தெரிவித்து இருந்ததாக கூறினார்.

கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டரை வருடங்களாக ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை எனக்கூறிய அவர் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல முதலமைச்சர் மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் எனவும்,மாநகராட்சியில் லஞ்ச லாவண்யம் கரை புரண்டு ஓடுகிறது எனவும் தெரிவித்தார்.மேயர் நேரடியாக ராஜினாமா கடிதம் தராமல் உதவியாளர் மூலம் தந்துள்ளார் எனவும் அவர் அந்த பொறுப்பிற்கு உரிய மதிப்பு தெரியாதவராக உள்ளார் எனக் கூறினார். மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கல்பனா என்னென்ன ஊழல் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் சிறப்பு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

திமுக கவுன்சிலர்கள் அலுவலகங்கள் கட்டப்பஞ்சாயத்து அலுவலகங்களாக இருந்தன என தெரிவித்த அவர் மேயர் இல்லாத இந்த நேரத்தில் மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஏதோ பெரிய ஊழலை மேயராக இருந்த கல்பனா செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.மேயர் கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியவர் செ.ம.வேலுச்சாமி மேயராக இருந்த போது விபத்து ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை ஜெயல்லிதா ராஜினாமா செய்ய சொன்னார் எனவும் அப்போதே அது நாளிதழ்களில் வந்திருக்கின்றது என தெரிவித்தார்.

மாநகராட்சியின் சிறப்பு கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றகப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் மாவட்ட ஆட்சியர் மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட இருக்கின்றது.பின்னர் மாநில தேர்தல் ஆணையம் மேயர் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story