பா ஜ பிரமுகருக்கு கத்திக்குத்து சம்பவம்

பா ஜ பிரமுகருக்கு கத்திக்குத்து சம்பவம்

போலீஸ் விசாரணை

கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (73) . வழக்கறிஞர். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவரை கடந்த 4 -ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் குறித்து சென்னையை சேர்ந்த வினோதினி (32), வெற்றிவேல் (34), ஆறுமுக பாண்டி (48), திருவள்ளூர் மாவட்டம் நவீன் (34) ஆகிய நான்கு பேர் மீது கோர்ட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வினோதினிக்கும் ராஜகோபாலின் மகன் ஆனந்த் என்பவர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உள்ளதால், வினோதினியின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையே வெற்றிவேல், ஆறுமுக பாண்டி மற்றும் நவீன் ஆகிய மூன்று பேரும் ராதாபுரம் ரோட்டில் சரணடைந்தனர். இது தொடர்ந்து மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் உள்ள ஜூடிசியல் மஜிஸ்திரேட் 2 -வது கோர்ட்டில் கோட்டார் போலீஸ் சார்பாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் மீதான விசாரணை நேற்று நடந்தது. கோர்ட் மூன்று பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதை அடுத்து போலீசார் மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story