மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்   கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாராளுமன்றத் தேர்தல்-2024 எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்கேற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 8 கி.மீ தூரமும் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, கோயமுத்தூர், திருச்சி, அரியலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும்/தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கல்லூரி மாணவர் பிரிவில் முதல் இடம் பெற்ற எஸ்.முரளிதரன், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ரூ.10,000 முதல் பரிசையும், இரண்டாம் இடம் வந்த எஸ்.முத்து இசக்கி, புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை ரூ.7,500 இரண்டாம் பரிசையும், மூன்றாம் இடம் வந்த எஸ்.வல்லரசு, பிஷப் கல்லூரி, திருச்சி ரூ.5,000 மூன்றாம் பரிசையும், கல்லூரி மாணவியர் பிரிவில் முதலிடம் பெற்ற எஸ். சௌமியா Dr. NGP கலைக் கல்லூரி கோயம்புத்தூர் ரூ.10,000 முதல் பரிசையும், இரண்டாம் இடம் பெற்ற ஆர். அஸ்வினி SAW கல்லூரி ரூ.7,500 இரண்டாம் பரிசையும் மற்றும் மூன்றாம் இடத்தை எ. கமல லக்ஷ்மி, ராணி அண்ணா கலைக் கல்லூரி திருநெல்வேலி ரூ.5, 000 மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுத்தொகை க்கான காசோலைகளை வழங்கினார். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகங்கள் அடங்கிய டி- சர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story