பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டம்

பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டம்

பிரதமருக்கு கடிதம் அனுப்பிய விவசாய சங்கத்தினர்

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈ.

முல்லைப் பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டத்தினை இன்று தொடங்கினார்கள்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழக கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயாகேம் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர்கள் ஒன்று திரண்டு பொதுமக்களிடம்,

பேபிஅணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்குவதற்கு பாரத பிரதமர் அரசாணை வழங்கிட வேண்டுமென தபால் அனுப்பும் போராட்டத்தினை தொடங்கினார்கள். அந்த தபாலில் தென் மாவட்டங்களில் உள்ள தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் ஒரு கோடி மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அணையை கேரளா அரசு அரசியல் உள்நோக்கத்திற்காக,

தொடர்ந்து அவதூறுகளை பரப்புவதும் மேலும் கேரளா அரசு அரசியல் உள்நோக்கத்திற்காக தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறுகளை பரப்புவது வேதனை அளிப்பதாகவும் இரு மாநில மக்களின் நல்லுறவை குலைக்கின்ற செயலாக மட்டுமின்றி இந்திய,

இறையாண்மைக்கு எதிரான செயல்பாடாக கருதுவதாகவும் உடனடியாக தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு தமிழக பொதுப்பணி துறையின் மூலமாக முல்லைப் பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையை,

பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட அரசாணையை வழங்கிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக கூறி பொதுமக்களிடமும் முக்கிய சங்க நிர்வாகிகளிடமும் தபால் அனுப்புவதற்காக கையெழுத்து மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்யும் நிகழ்வினை தொடங்கினார்கள்.

Tags

Next Story