கோவில் குளக்கரையை துாய்மையாக்கிய மாணவியர்
துாய்மை பணியில் ஈடுபட்ட மாணவியர்
நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கோவில் குளக்கரையை துாய்மையாக்கிய மாணவியர்.
திருவொற்றியூர் வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது. கடந்த 23ம் தேதி துவங்கிய முகாம் நாளை நிறைவடைகிறது. இதில் மரம் நடுதல், ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை மாணவியர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 'இனியவை கற்றல்' என்ற கருப்பொருளைக் கொண்டு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் வளாகம் மற்றும் குளங்களை சுத்தம் செய்யும் பணியில் 50க்கும் மேற்பட்ட மாணவியர் ஈடுபட்டனர்.
Next Story