நீலகிரியை நனைத்தது கோடை மழை!

நீலகிரியை நனைத்தது கோடை மழை!

மழை

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்த்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். இதன்படி தென்மேற்கு பருவமழை 700 மி.மீ., வடகிழக்கு பருவமழை 300 மி.மீ., கோடை மழை 250 மி.மீ., பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இந்நிலையில் நீலகிரியில் இன்று முதல் முறையாக கோடை மழை சில்லென்ற குளிர் காற்றுடன் தொடங்கியது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கூட 24 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் இன்று கோடை மழை தொடங்கி விட்டதால் ஊட்டிக்குரிய குளிர்கால நிலை வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டியில் நேற்று குறைந்த பட்சமாக 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது காற்றில் ஈரப்பதத்தின் அளவு 32 சதவீதமாக இருந்தது. இதேபோல் வரும் காலங்களில் கோடை மழை அதிகமாக பெய்து நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் நீலகிரியை வாட்டி வதைத்து வரும் காட்டுத்தை பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story