இடிந்து தரைமட்டமான குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர்

இடிந்து தரைமட்டமான குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர்

மதுராந்தகம் அருகே குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது.

மதுராந்தகம் அருகே குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது.

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் அடுத்த சிறுபேர்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லியங்குணம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கல்லியங்குணத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் குடிநீர் கிணறு உள்ளது. அந்த ஒரு குடிநீர் கிணற்றில் இருந்து 3.மின்மோட்டார் வாயிலாக, மூன்று மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஏரியின் நடுவே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் கிணறு தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏரியில் நீர் நிரம்பி வருகிறது. இதனால், கிணற்றில் ஏற்பட்ட நீர் ஊற்றின் காரணத்தால், இன்று அதிகாலை நேரத்தில், நான்கடி உயரம் கொண்ட இரும்பு மூடியுடன் கொண்ட கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து, கிணற்றுக்குள் விழுந்து தரைமட்டமானது. இதனால், அக்கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.விரைவாக போர்க்கால அடிப்படையில் குடிதண்ணீர் விநியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story