ஓட்டு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

ஓட்டு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது
விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் கட்டமாக ஆரம்பமாக உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 16 வேட்பாளர்கள் களமிறங்கும் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,33098 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக 283 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சின்னங்கள் பொருத்து மணி இன்று நடைபெற்றது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில் மொத்தம் 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 15 வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் ஒரு நோட்டா உட்பட 16 சின்னங்கள் பொருத்தப்பட்டன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படும் போது மாற்று இயந்திரங்களாக பயன்படுத்தப்படும் 68 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் 16 சின்னங்களும் பொருத்தப்பட்டது. அனைத்து மின்னணு இயந்திரங்களிலும் சின்னங்கள் பொருத்தப்பட்டு அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் இந்த மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.

Tags

Next Story