மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி!

பிருந்தாதேவி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குகளை சரிபார்க்கும் கருவிகள் (வி.வி. பாட்) ஆகியவை சேலம் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவின் போது தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படும்.

Tags

Next Story