ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி

ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி

சின்னம் பொருத்தும் பணி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் 332 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான 398 கன்ட்ரோல் யூனிட், 796 பேலட் யூனிட், 431 வி.வி.பாட்., இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. பெல் நிறுவன இன்ஜினியர்கள், வி.வி.பாட்., இயந்திரங்களில் சின்னத்தை பொருத்தினர். தொடர்ந்து, வேட்பாளர் பெயர், போட்டோ, மற்றும் சின்னத்துடன் அச்சடிக்கப்பட்ட ஷீட்டினை, பேலட் யூனிட் இயந்திரத்தில் பொருத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, பேலட் யூனிட் இயந்திரத்தில் 'நோட்டா' உட்பட 22 பட்டன்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்தனர்.

பரிசோதனை முடிந்ததும், பேலட் யூனிட் இயந்திரத்தில் பதிவான 22 ஓட்டுக்களும் ஜீரோவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன் மேற்பார்வையில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் 'பேலட் ஷீட்' பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story