மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி

வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

பாபநாசத்தில் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவரும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் சின்னம் இடம்பெறுகிறது. இவற்றை மின்னணு எந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ பி மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உடன் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ,பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் துணை வட்டாட்சியர்கள் பிரபு , அன்புக்கரசி ,தமயந்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story