வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறைக்கு கொண்டு செல்லும் பணி!
திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19&ந் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்குப்பதிவுக்காக தொகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டன. கூடுதலாக தேவைப்படுகிற வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் 2081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2255 விவிபேட் எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பின்னர் இந்த எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் அனைத்தும் மீண்டும் வாக்கு எண்ணும் மையமாக எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டது. இதுபோல் மற்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும் கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. இதுபோல் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததால் இரும்பு தடுப்பு உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது. மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திரும்ப பெறப்பட்டனர். கல்லூரியில் டெண்ட் உள்ளிட்டவைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.