தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது!
கைது
வாணாபுரம் அருகே அணிவகுப்பின் போது தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர் .
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே தொண்டமனூரில் துணை ராணுவத்தினர் மற்றும் வாணாபுரம் போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (வயது 24) என்பவர் மதுபோதையில் போலீசார் மற்றும் ராணுவத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து வாணாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story