தம்பதியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

தம்பதியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

நீதிமன்றம்

கணவன், மனைவியை தாக்கிய நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் மருவதத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் கூடலூர் கிராமம் அண்ணா மன்ற தெருபகுதியைச் சேர்ந்த முருகேசன் 48, நாகராஜ் 27, ஆகிய இருவரும் குடும்ப தகராறு காரணமாக தன்னையும் தன் மனைவியையும் பின் தலையில் கட்டையால் தாக்கியதாக மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து, வழக்கின் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை இருந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி. சங்கீதா சேகர் இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள முருகேசனை விடுதலை செய்தும், நாகராஜ் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட பாடாலூர் வட்ட காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் கீதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.


Tags

Next Story