அக்காள் கணவரை வெட்டிய வாலிபர் கைது!

அக்காள் கணவரை வெட்டிய வாலிபர் கைது!

 கைது 

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் அக்காள் கணவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் வேல்பாண்டி மகன் ராஜவேல் (44). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் வெள்ளைப்பட்டியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சம்பவத்தன்று மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவியின் தம்பியான பெஞ்சமின் வினோபா (21) என்பவர் அங்கு வந்து ராஜ வேலுவிடம் தகராறு செய்தாராம். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் ராஜவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெஞ்சமின் வினோபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story