தலைமறைவாக இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கஞ்சா விற்பனையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் தலைமறைவாக இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொட்டூர் கிராமத்தின் அருகே சூளகிரி போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் மறைந்திருந்து கஞ்சா புகைத்து வந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்தவர்களை போலீசார் விசாரணை செய்த போது அவர் அங்கிருந்து சிலர் தப்பிச் சென்றனர். இந்த விசாரணையில் போலீசார் இருவரையை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் தொடர்புடையதாக சந்தோகத்தின் பேரில் அதே கிராமத்தை உதயகுமார் 31 என்பவரை போலீசார் தேடி வந்தனர். கடந்து 2 நாட்களாக தலைமறைவாக உதயகுமார் இருந்த வந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தின் அருகே மரத்தில் ஒருவர் தூக்கிட்டு நிலையில் துற்நாற்றம் வீசு வருவதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது அங்கே உதயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணன் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சம்பவத்தின் போது கஞ்சா விற்பனை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி போலீசார் அவரை தேடி வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உறுப்பினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து இந்த வழக்கு சம்பவம் குறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் தலைமறைவாக இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story