ஒட்டப்பட்டியில் வெகுவிமரிசையாக நடந்த தெப்பத்திருவிழா

ஒட்டப்பட்டியில் வெகுவிமரிசையாக நடந்த தெப்பத்திருவிழா

தெப்ப திருவிழா

எடப்பாடி அடுத்த ஒட்டப்பட்டி அங்காளம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவிலின் மாசி மாத திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் பால்குடம் ஊர்வலம், நேற்று அதிகாலையில் தீமிதி திருவிழா, சுவாமி திருக்கல்யாணம், மயான கொள்ளை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்று தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலிலிருந்து செக்கான்குளத்திற்கு அங்காளபரமேஸ்வரி சுவாமியை கொண்டு சென்று அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியை வைத்து பல்வேறு அபிஷேகங்கள் செய்து

தீபாராதனைகள் காட்டப்பட்டு தெப்பத்தேரினை ஊஞ்சல் ஆட்டிய போது பாம்பை மேளங்கள் முழங்க பக்தர்களுக்கு அங்காளம்மன் அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னை ஆனந்தாயி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story