சமுதாய கழிப்பிடம் அருகே உள்ள முட்புதரை அகற்ற வேண்டும்
முப்புதரை அகற்ற கோரிக்கை
பெரியமணலியில் சமுதாயக் கழிப்பிடம் அருகில் உள்ள முப்புதரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி சந்தைப்பேட்டை அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.2லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இக்கழிப்பிடம் அருகில் அதிகளவில் முட்செடிகள் நிறைந்து காணப்படுகின்றது. இதில், பாம்பு, பூரான், செய்யான் உள்ளிட்ட பல்வேறு விசஜந்துக்கள் நடமாடி வருகின்றது. இதனால், இங்கு வருகின்ற மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். ஆகவே, முட்புதர்களை அகற்ற சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story