மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம் 

2014 சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார சட்டத்தை மீறி வெண்டிங் கமிட்டி அமைக்காமல் தரைக் கடைகளை அப்புறப்படுத்த கூடாது, மாமுல் வாங்கிக்கொண்டு புதிய இடங்களை நூற்றுக்கணக்கான தரைக்கடைக்கு அனுமதி அளித்துவிட்டு மாநகராட்சி அடையாள அட்டை பெற்று இருபது ஆண்டுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, விமான நிலையம் திருவரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தர கடைகளை அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும், அனைத்து தரக்கடை வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், தொடர்ந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரி சங்கத்தின் சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வி, பொருளாளர் சுரேஷ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story