குடிசை வீடு எறிந்து நாசம் மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்

சங்ககிரி அருகே சமைத்துக் கொண்டிருந்தபோது குடிசை வீடு எறிந்து நாசம் மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டம்பட்டி மேல் புதூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராசம்மாள் (65) என்பவர் இன்று அதிகாலை வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கூரை வீட்டில் தீப்பிடித்து எரிந்தது இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story