உரிய ஆவணங்களின்றி ரயிலில் பெண் பயணி எடுத்துவந்த ரூ. 40 லட்சம் ரொக்கம் பறிமுதல் !

X
பணம் பறிமுதல்
திருச்சியில் உரிய ஆவணங்களின்றி ரயிலில் பெண் பயணி எடுத்து வந்த ரூ. 40 லட்சம் ரொக்கம் பாதுகாப்பு சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை காலை ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான பாதுகாப்பு சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த விரைவுரயிலில், சென்னையைச் சோ்ந்த பெண், ரூ. 40 லட்சம் மதிப்பில் ஐநூறு ரூபாய் பணத்தாள்கள் கொண்ட கட்டுகளை ஒரு தோள் பையில் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் அவற்றுக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் இதுகுறித்து வருமான வரித் துறையினருக்குப் போலீஸாா் தகவல் அளித்து அவா்களிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த அவா், தனது கணவரின் சகோதரா் இல்ல விழா மற்றும் கட்டடப் பணிகளுக்காக ரூ.40 லட்சம் ரொக்கம் எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் காட்டிய பின்னா் தொகை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
