அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்

மரங்கள் மாயம்

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்.
அரசு போக்குவரத்து கழக திருக்கோவிலுார் கிளை பணிமனையில் இருந்த மரங்கள் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக திருக்கோவிலுார் கிளை பணிமனை மணம்பூண்டியில் உள்ளது. பணிமனைக்கு பாதுகாப்பான சுற்றுச்சுவர் இல்லாத சூழலில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு உள்ளிட்ட மரங்கள் இருந்தன. கோடைகாலத்தில் வாகனங்களை நிழலில் நிறுத்த வசதியாக இருந்தது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெட்டி லாரி மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்பு மிக்க பணிமனை வளாகத்திற்குள் லாரிகளைக் கொண்டு வந்து மரங்களை வெட்டி துண்டுகளாக்கி ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அரசு அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டதா? அவ்வாறு வெட்டப்பட்டு இருப்பின் இரவு நேரத்தில் லாரிகளில் மரங்களை ஏற்றி சென்றதன் நோக்கம் குறித்து பணிமனை ஊழியர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

Tags

Next Story