டெட்டனேட்ர் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை

டெட்டனேட்ர் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை

 இளையராஜா 

சேலம் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட 2500 கிலோ டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த லாரியை ஓட்டி வந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பூர் காவல் நிலைய போலீசார் லாரி மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி பான்பராக் மற்றும் குட்கா அல்லது மது பாட்டில்கள் கடத்துகிறார்களா ? என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த ஒரு லாரியை சோதனை செய்தனர் அப்போது லாரியில் பெட்டி, பெட்டியாக டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது . இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு வந்து லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ டெட்ட னேட்டர்கள் மற்றும் வயர்கள் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் இந்த லாரியை போலீசார் குரங்கு சாவடி அருகே போலீசாரின் துப்பாக்கி சூடும் பயிற்சி செய்யும் மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இந்த நிலையில் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டப்பள்ளியைச் சேர்ந்த இளையராஜா (33 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story