டிராக்டர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் இட்டதால், சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

டிராக்டர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் இட்டதால், சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
டிராக்டர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் இட்டதால், சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. ஈரோடு மாவட்டம், அந்தியூர், தேனாம்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 44.இவர் ஏபிடி பார்சல் சர்வீஸ் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி இரவு 8:30- மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் ஏபிடி பார்சல் வேனை ஓட்டிக்கொண்டு வந்தார். இவரது வாகனம், கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலையம் உட்பட்ட, ஆர்.புதுக்கோட்டை அருகே உள்ள முனியப்பன் கோவில் அருகே வந்த போது, இவரது வாகனத்திற்கு முன்பாக ஒரு டிராக்டர் வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த டாக்டர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் இட்டார். வேகமாக வந்த போது, திடீரென பிரேக் இட்டதால், சாலையில் சரக்கு வாகனத்தின் சக்கரங்கள் சறுக்கிக் கொண்டு சென்று, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த பொன்னுச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஏபிடி பார்சல் சர்வீஸ்-ன் திருச்சி உதவி மேலாளர் வேலுமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வேனை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான பொன்னுசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story