ராமநாதபுரத்தில் மயக்கம் அடைந்த காவலர்

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி திடீரென மயங்கி விழுந்த போலீஸ் தலையில் காயம்

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியில் இருந்த காவலர் திடீரென மயங்கி விழுந்து காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து நாளை வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிக்காக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் மணிமாறன் என்பவர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது,

திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் தலையில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்பொழுது மணிமாறன் நலமுடன் இருக்கிறார் பாதுகாப்பு பணியின் போது திடீரென மயங்கி விழுந்த காவலர் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இதே போன்று கடந்த வாரம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, இன்று காவலர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story