குடிபோதையில் கீழே தவறி விழுந்தவர் பலி
விருதுநகர் எஸ்ஏ அண்ணாமலை தெருவை சார்ந்தவர் முத்துமாரி இவரது கணவர் சக்திவேல் சக்திவேல் மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சக்திவேல் இரவு குடிப்பதற்கு மாடிக்கு சென்றதாகவும் குடித்துவிட்டு கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக மாடிப்படியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சேர்க்கப்பட்ட சக்திவேல் மேல் சிகிச்சைக்காக பதினேழாம் தேதி மதுரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சைக்காக விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி ஒன்றாம் தேதி உயிர் இழந்தார்.
இது குறித்து உயிரிழந்த சக்திவேலின் மனைவி முத்துமாரி அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.