மாடியில் இருந்து மதுபோதையில் தவறி விழுந்தவர் பலி

மாடியில் இருந்து மதுபோதையில் தவறி விழுந்தவர் பலி

பலி

கோவையில் மது போதையில் கட்டிட தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சதீஷ்குமார்(34) கோவையில் தங்கி வேலை செய்து வருகிறார். கோவில்பாளையம் பகுதியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது.இந்த நிலையில் சதீஷ்குமார் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் முன் தினம் வீட்டின் மாடியில் மது அருந்தி உள்ளனர்.மற்றவர்கள் அனைவரும் உறங்க சென்ற நிலையில் சதீஷ்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

பின்னர் குடிசைக்கு படுக்க செல்ல முயன்றவர் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துானையில் அனுமதித்தனர்.முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சதீஷ்குமாரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிணத்துகடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story