திடீரென மயங்கி விழுந்த சிறுமி பலி
திடீரென மயங்கி விழுந்த சிறுமி பலி
புதுக்கோட்டை மாவட்டம் , பிசானத்தூர் பகுதியில் மயங்கி விழுந்த சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வகோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிசானத்தூர் கிராமத்தில் வசிக்கும் மதியழகன் என்பவரின் மகள் சுகன்யா வயது 17 இவர் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் உடனடியாக அவர் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டதாக கூறி உடலை புதுக்கோட்டை மருந்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story