பட்டா வழங்க கோரி கிராம மக்கள் குடியேறும் போராட்டம்!

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் குடியேறும் போராட்டம்!

போராட்டம்

கழுகுமலை அருகே வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனா்.
தூத்துக்குடிமாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளத்தில் உள்ள மக்கள் 153 பேருக்கு 30.3.1993-ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடங்களை வருவாய்த்துறை மூலம் முறையாக அளந்து கொடுக்கப்படவில்லை. இதனால் பட்டா வழங்கப்பட்டு, மக்கள் குடியிருப்புகள் கட்ட முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், பட்டா பெற்ற மக்கள், பட்டாக்குரிய சா்வே எண் உள்ள இடத்தில் மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் எம். சாலமன்ராஜ் தலைமையில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அவா்களுடன் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.ரவீந்திரன் மற்றும் அக்கட்சியினா், பொதுமக்கள் திரண்டு கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 3 மாத காலத்துக்குள் பட்டாக்களுக்கு உரிய இடங்கள் அளந்து வரைமுறைபடுத்தி கொடுக்கப்படும். அதுவரை பட்டா பெற்றவா்களும், எதிா் மனுதாரா்களும் சம்பந்தப்பட்ட இடத்துக்குள் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags

Next Story