காதை அறுத்த கணவனை கைது செய்ய ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி !

காதை அறுத்த கணவனை கைது செய்ய  ஆட்சியரிடம்  மனு அளித்த மனைவி !

கைது

ஜோலார்பேட்டை அருகே காதை அறுத்த கணவனை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதை அறுத்த கணவனை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்ததால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கனம்பட்டி பகுதியை சேர்ந்த புனிதா (34) என்பவர் வாணியம்பாடி அடுத்த புதூர் அண்ணாநகர் 5வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த பொன்னப்பன் (38) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனைவி புனிதா வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது. மனைவி புனிதா கணவனைப் பிரிந்து ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் அலமேலு வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே சாலையில் புனிதா சென்று கொண்டிருந்த போது திடீரென அவரது கணவன் பொண்ணப்பன் சரமரியாக தாக்கி கத்தியால் புனிதாவின் காதை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரித்து விட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் புகார் அளித்துள்ளார். கணவர் தன்னை மீண்டும் தாக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் உடனடியாக கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story