வாலிபரை கொன்ற மனைவி ஓராண்டிற்கு பின் அம்பலம்
போலீசார் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில், ஓராண்டிற்கு முன், மனைவியால் மோகன் கொல்லப்பட்டது தெரியவந்தது.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு, கவரை தெருவைச் சேர்ந்தவர் மோகன் 26, இவரை கடந்த ஓராண்டாக காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராஜ், காஞ்சி தாலுகா போலீசில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஓராண்டிற்கு முன் மனைவியால் மோகன் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறியதாவது: மோகனுக்கும், பவானிக்கும் இரண்டாவது திருமணமாக இருந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் பவானிக்கு தகாத உறவு ஏற்பட்டது. மோகன் கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டன் மற்றும் பவானியின் தங்கை கணவர் தயாளன் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய பவானி திட்டமிட்டார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி மதுபோதையில் இருந்த மோகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வையாவூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மணிகண்டன் தயாளன் மற்றும் ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணாடி பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை செய்து எரித்துள்ளனர். மூன்று நாட்கள் கழித்து சம்பவ இடத்தில் கிடந்த எலும்புக் கூடுகளையும், மீண்டும் பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி உள்ளனர். மோகனின் தந்தை ராஜ் புகாரின்படி ஓராண்டிற்கு பின் இந்த வழக்கு துப்பு துலங்கியது. இவ்வாறு போலீசார் கூறினர். இந்த வழக்கில்,பவானி 24,தயாளன் 28,மணிகண்டன் 43,மற்றும் ராஜேஷ் 29,ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story