வீட்டை விட்டு வெளியேறிய மனைவி - மாந்த்ரீகரை போலீசில் ஒப்படைத்த கணவன்
தினேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மண்டலவாடி ஏலகிரி மலை ரோடு பகுதியில் வசித்து வரும் கணேசன் (35) .இவர் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி சத்யா (34) என்கிற மனைவியையும் ஒரு மகனும் உள்ளனர் இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டது அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் வாய் தகராறு முற்றியது இதன் காரணமாக கணேசன் வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார்.
அதற்குள் அவருடைய மனைவி சத்யா வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது தனது மகனிடம் உனது அம்மா எங்கே என கேட்கும் போது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சென்றுவிட்டார் எனக் கூறினார். இதனால் கணவர் அன்றையதினம் இரவில் வீட்டில் தூங்கிவிட்டு மறுநாள் தனது மாமியார் வீட்டிற்கு போன் செய்து தனது மனைவி குறித்து கேட்கும் போது வரவில்லை என தெரிவித்தனர்.கணவர் கணேசன் தனது மனைவியை உறவினர்கள், நண்பர்கள், கோயில்களில் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை .இதனால் கடந்த 19 ம் தேதி கணேசன் தனது மனைவியை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு இருசக்கர வெளியே சென்றவர் இந்நாள் வரை வீடு திரும்பவில்லை எனவே என்னுடைய மனைவி மற்றும் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமால் போன சத்யா மற்றும் இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர். இந்நிலையில் கணவர் தன்னுடைய மனைவியை பிடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தார் அப்போது தனது மனைவியின் தொலைபேசிக்கு அதிக முறை பேசிய வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் இதனையெடுத்து போலீசார் விசாரணை செய்ததில் திருச்செங்கோடு பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமார் ( 34) என்பவர் தான் கொல்லிமலை பகுதியில் மாந்த்ரீகம் செய்வதாகவும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் இலவசமாக மாந்த்ரீகம் பார்த்து குறி சொல்வதாக கூறினார். காணமால் போன சத்யா என்னுடைய தொலைபேசியின் வாயிலாக உடல் பிரச்சினை குறித்து சொல்லி தீர்வு கண்டார் என கூறினார் .இதன் காரணமாக தினேஷை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்