கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டில் கொண்டு வந்த பெண்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டில் கொண்டு வந்த பெண்ணால் பரபரப்பு உண்டானது.

நாமக்கல் அடுத்த மல்லசமுத்திரம் கோரிமேடு பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் நேற்று தனது தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினார். அப்போது, நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் உமா, அவரின் மனு மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிகை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

மேலும் 11- ம் வகுப்பு படிக்கும் அவரது மகனுக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிப்பை எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடக்கூடாது என்று அறிவுரை வழங்கினார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, உடனே அந்த மாணவனுக்கு கல்வி சம்பந்தமான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story