திருத்தணியில் மர்மநபர்கள் தாலி சரடு  பறித்ததாக நாடகம் ஆடிய பெண்

திருத்தணியில் மர்மநபர்கள் தாலி சரடு  பறித்ததாக நாடகம் ஆடிய பெண்

 தாலிசெயினை மீட்ட காவல்துறையினர்

திருத்தணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த மர்மநபர்கள்  தாலி சரடு  பறித்து ஓட்டம் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (48) இவர் திருவள்ளூரில் அரசு மருத்துவமனை கல்லூரி கம்ப்யூட்டர் ஆப்டராக பணியாற்றி வருகிறார்.

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் அவரது மகன் மற்றும் மகளையும் மாலை வீட்டிற்கு நாராயணன் மனைவி பிரசாந்தி(37) தர்மராஜா கோயில் ரயில் தண்டவாளம் அருகில் சிறிய பாலத்தின் கீழே நடந்து சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து சென்ற மர்ம நபர்கள் பிரசாந்தி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சரவன் தாலி சரடு பறித்து மின்னல் வேகத்தில் பறந்ததாக கொடுத்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ், காவல் ஆய்வாளர் மதியரசன் ஆகியோர் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் அது போன்ற எந்த நிகழ்வும் இல்லாததால் அந்த பெண்ணிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக திருத்தணி கவரை தெருவில் உள்ள விநாயகா ஜுவல்லர்ஸ் என்ற அடகு கடையில் 1.30 லட்சத்திற்கு நகையை அடமானம் வைத்து பணம் வாங்கியது உறுதியானது.

இதனைஅடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக காவல்துறையினரை அலைக்கழித்த பெண்ணை காவல்துறையின் எச்சரித்து அனுப்பி வைத்தனர் இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Tags

Next Story